மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பஹல்காம் தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த 22-ம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டம் கூடியது.
மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்ட கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை டெல்லியில் உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்த முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், பயங்கரவாத தாக்குதல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.