மேலூர் அருகே அரியூர்பட்டி சாத்தன் கண்மாயில் நடைபெற்ற பாரம்பரியமிக்க சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரியூர்பட்டி சாத்தன் கண்மாயில் ஆண்டுதோறும் சமத்துவ மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், நல்ல மழை பெய்யவும், விவசாயம் செழிக்க வேண்டியும் நடப்பாண்டுக்கான சமத்துவ மீன்பிடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கிராமப் பெரியவர்கள் வலை வீசி மீன்பிடி திருவிழாவைத் தொடங்கி வைத்தனர்.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு நாட்டுவகை மீன்களான கட்லா, கெளுத்தி, அயிரை, விரால், ரோகு உள்ளிட்ட மீன்களைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். இந்த நிகழ்வை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.