ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியதால் இயல்புநிலை திரும்பியுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு மீண்டும் வரத் தொடங்கிய சுற்றுலாப் பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி மேற்கொண்டு இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் கண்டு ரசித்தனர்.
இதனால் அப்பகுதியில் இயல்புநிலை திரும்பியுள்ளதால், சுற்றுலாத்துறை நிச்சயம் வளர்ச்சி பெறும் என உள்ளூர் வியாபாரிகளும், பொதுமக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.