தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் எரிவாயு எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இந்தியாவில் 28 இடங்களில் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்க ஓஎன்ஜிசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதில் தமிழகத்தில் 4 இடங்களும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரிக்கு அருகே 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஒரு இடத்திலும் எரிவாயு எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆழ்கடல் எண்ணெய் எரிவாயு திட்டத்துக்குத் தமிழக மீனவர்கள் மற்றும் சுற்றுச் சூழல் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.