தஞ்சையில் தீ விபத்தில் சிக்கி மீட்கப்பட்டவர்களுக்கு உரியச் சிகிச்சை வழங்கப்படவில்லை என் கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடந்த 24-ம் தேதி தஞ்சாவூர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவு முதல் தளத்தில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தால் பணியில் இருந்த 31 பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாதிப்பட்டவர்களுக்கு உரியச் சிகிச்சை அளிக்கப்படாததுடன், அரசு தரப்பில் யாரும் வந்து பார்க்கவில்லை எனக் கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.