அடுத்த ஐபிஎல் சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்விக்கு சுரேஷ் ரெய்னா பதிலளித்துள்ளார்.
43 வயதான தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சீசனோடு ஓய்வு பெறுவார் என்று அனைவரும் நினைத்த வேளையில் அவர் இந்த சீசனிலும் விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னாவிடம் ரசிகர் ஒருவர் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? என்று எக்ஸ் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அவர், தோனி இன்னும் ஒரு ஐபிஎல் சீசனில் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.