புதுச்சேரியில் விசா காலக்கெடு முடிந்தும் நாட்டைவிட்டு வெளியேறாத பாகிஸ்தான் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி கிருஷ்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஹனிஃப் கான் பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபவுசியா பானு என்ற பெண்ணை கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்குப் பின் ஃபவுசியா பானு தனது விசாவை 12 ஆண்டுகளாக நீட்டித்து வந்தார். அண்மையில் நடந்த பஹெல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பின், பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு முடிவடைந்த விசாவை புதுப்பிக்காமல், தொடர்ந்து புதுச்சேரியில் வசித்து வந்த ஃபவுசியா பானு மீது வெளிநாட்டினர் பதிவு அலுவலக ஆய்வாளர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் ஃபவுசியா பானு மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.