26 ரஃபேல் விமானங்களை 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தால் ரஃபேல் விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே இந்நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்காக 36 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்கியுள்ளது.
அதன் தொடர்ச்சியாகக் கடற்படைக்கும் ரஃபேல் விமானங்கள் வாங்கத் திட்டமிட்ட இந்தியா அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
அதன்படி, 63 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், ஒற்றை இருக்கை கொண்ட 22 ரஃபேல் விமானங்கள், இரட்டை இருக்கை கொண்ட 4 ரஃபேல் விமானங்கள் என மொத்தம் 26 ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா முடிவு செய்தது.
இந்நிலையில், ரஃபேல் விமானங்களை வாங்க இந்தியா – பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியா சார்பில் பாதுகாப்புத்துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
கடற்படையின் ஐ.என்.எஸ் விக்ராந்த் போர் கப்பலில் இருந்து இந்த ரஃபேல் விமானங்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.