செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.
செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக்கோரிய மனுக்கள் மீதான விசாரணையில், அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த தகவல் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜி பதவியிலிருந்தால் சாட்சிகளை அச்சுறுத்துவார் என்பதால் அவர் எந்த பதவியும் வகிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
தொடர்ந்து இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுத் தாக்கல் செய்யலாம் எனக்கூறி வழக்குகளை முடித்து வைத்தனர்.