பஹல்காம் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், தாக்குதலின்போது எடுக்கப்பட்ட புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுடும் சத்தத்தை கேட்டு சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடும் காட்சி இடம்பெற்றுள்ளது. ரோப் காரில் இருந்தபடி சுற்றுலா பயணி ஒருவர் பதிவு செய்த வீடியோ வைரலாகி வருகிறது.