குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் அணியின் 14 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 84 ரன்கள் எடுத்த ஆட்டமிழந்தார். 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி பெரிதும் கைகொடுத்தார்.
35 பந்துகளில் 11 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் அடித்து சதம் விளாசி ஆட்டமிழந்தார். மறுபுறம் ஜெய்ஷ்வால் தன் பங்கிற்கு 70 ரன்கள் குவித்தார். இதனால் 15 புள்ளி 5 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.