வேலூர் அருகே தகன எரிவாயு மையத்தில் உடலை எரிக்காமல் சட்டவிரோத செயல் நடப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மையத்தை பூட்டி சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம், அம்மனாங்குட்டை பகுதியில் மாநகராட்சி சார்பில் செயல்படும் தகன எரிவாயு மையத்தில் ஒரு உடலை தகனம் செய்ய 4 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோலகாரன் பகுதியைச் சேர்ந்த 2 பெண்களின் உடல்களை தகனம் செய்ய வந்தபோது பணியில் இருந்த ராஜேஷ் என்பவர் ஒருமணி நேரத்தில் அஸ்தியை தருவதாக கூறியுள்ளார்.
ஆனால், உடல்களை எரிப்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது வேறு ஒரு அறையில் உடல்கள் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மேலும், அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரி பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, உடல்களை எரிக்காமல் அஸ்தியை வழங்குவதாகவும், தகன மையத்தில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து, மையத்தை
பொதுமக்கள் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், மையத்தின் வளாகத்தில் இருவரது உடல்களையும் புதைத்து சென்றனர்.