அங்கத் பும்ராவின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பும்ராவின் மனைவி சஞ்சனா ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை காண பும்ராவின் மனைவி சஞ்சனா மற்றும் அவர்களது மகன் அங்கத் ஆகியோர் மைதானத்திற்கு வந்திருந்தனர்.
அப்போது இருவரும் கைதட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் அங்கத் சிரிக்காமல் அமைதியாக இருந்தான். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில், தன் மகன் அங்கத் பும்ரா ஒரு வைரல் செய்தியாக ஆக்கப்படுவதில் தங்களுக்குத் துளியும் விருப்பமில்லை என பும்ராவின் மனைவி சஞ்சனா தெரிவித்துள்ளார்.