காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!
Jul 23, 2025, 07:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

காஷ்மீரை சுற்றி வளைக்கும் ராணுவம் : பயங்கரவாதிகளை வேரறுக்க களமிறங்கிய NIA!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 08:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகள் எப்படி இந்தியாவுக்குள் நுழைந்தார்கள்? எவ்வளவு காலமாக இந்தியாவில் தங்கி இருந்தார்கள் ?  யார் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார்கள்?  என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.

காஷ்மீர் பகல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி, இந்து என்று உறுதி செய்தபின், நிராயுத பாணியாக நின்ற 26 சுற்றுலாப் பயணிகளைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள்  சுட்டுக் கொன்றனர். தாக்குதல் நடந்த இடத்திலிருந்து, AK-47 மற்றும் M-14 CARPINE ரகத் துப்பாக்கி தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் பயங்கரவாதிகளின் ஓவியங்களை வரைந்து பாதுகாப்புப் படையினர்  வெளியிட்டுள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த அடில் உசேன் தோக்கர் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஷிம் மூசா மற்றும் அலி பாய் ஆகிய பயங்கரவாதிகளே தாக்குதலுக்குக் காரணம் என்று அடையாளம் காணப் பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவிய மூசாவும், அலியும் சுமார் இரண்டு ஆண்டுகளாகக் காஷ்மீரில் சுற்றி நோட்டம் பார்த்து வந்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு  வழிகாட்டியாக அடில் உசேன் தோக்கர் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது.

2023 ஆம் ஆண்டு, சம்பா மற்றும் கதுவா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்த மூசா, கிஷ்த்வார் நகருக்கு இடம்பெயர்ந்துள்ளார். பிறகு ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள புட்காம் மாவட்டத்தில் தங்கியதாகக் கூறப் படுகிறது.

மூசாவுக்குப் பிறகு இந்தியாவுக்குள் ஊடுருவிய அலி  ஸ்ரீநகரின் புறநகரில் உள்ள டச்சிகாம் காடுகளில் பதுங்கி இருந்துள்ளான். அடர்ந்த மலைக் காடுகளாக விரிந்து கிடக்கும்  டச்சிகாம் காடுகள், பகல்காம் பள்ளத்தாக்குகளுடன் இணைந்துள்ளன. இந்த இரண்டு பயங்கரவாதிகளுடன் இணைந்து,பகல்காம் தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியது, உள்ளூரைச் சேர்ந்த அடில் உசேன் தோக்கர் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீநகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில்  உள்ள பிஜ்பெஹாராவில் உள்ள குர்ரே கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியான அடில் உசேன் தோக்கர், கல்லூரியில் படிக்கும் காலத்தில், இஸ்லாமிய மத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தார்.

இந்திய ராணுவத்தினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்குகளில் தவறாமல் கலந்து கொண்ட  அடில் உசேன் தோக்கர், கடந்த 2018ம் ஆண்டு, தனது வீட்டை விட்டு வெளியேறி, மாணவர் விசாவில் பாகிஸ்தானுக்குச் சென்றுள்ளார்.

பாகிஸ்தானுக்குச் சென்றவுடன், தம் குடும்பத்துடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டு, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான  லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளிடம்  ஆயுதப் பயிற்சி எடுத்துள்ளார்.

இந்தியாவுக்குள் நுழைய உதவிய காஷ்மீர் தொழிலாளர்கள் மூலமாகவே ஆயுதங்களையும் பயங்கரவாதிகள் கடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீருக்குள் நுழைந்தவுடன்,  கோகர்நாக் முதல் பகல்காம் வரை 22 மணி நேரம் கடுமையான பயணத்துக்குப் பிறகு, பைசாரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துள்ளனர்.

ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பிரிவு அருகிலுள்ள சாலைப் பாதையைப் பாதுகாப்புப் படையினர் அடைய சுமார் 45 நிமிடங்கள் ஆகும் என்றும், அங்கிருந்து பைசரனை அடைய இன்னும் 5 நிமிடங்கள் ஆகும் என்றும், மத்திய   CRPF படையினர் வந்து சேரவும்  குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும் என்றும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கணக்கிட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பகல்காம் பயங்கர வாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தப்பி ஓடி, பூஞ்ச்-ரஜோரி,தோடா, கிஷ்த்வார் உள்ளிட்ட அடர்ந்த காட்டுப் பகுதிகளில் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.  பயங்கரவாதிகளைப் பிடிக்கப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், அடில் உசேன் தோக்கரின் வீடு, IEDகளைப் பயன்படுத்தி வெடிக்க வைக்கப்பட்டது.  வீட்டுக்குள் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும்  லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி ஷாஹித் அகமது குட்டே உட்பட நான்கு பயங்கவாதிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா (LeT) மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது (JeM) ஆகிய மூன்று முக்கிய பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 14 பயங்கரவாதிகள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். அதில், மூன்று பேர் ஹிஸ்புல் முஜாஹிதீனுடனும், எட்டு பேர் லஷ்கர்-இ-தொய்பா உடனும்,மூன்று பேர் ஜெய்ஷ்-இ-முகமது உடனும் தொடர்புடையவர்கள் என்று கூறப் பட்டுள்ளது.

இந்த 14 பயங்கரவாதிகளுக்கும் பகல்காம் தாக்குதலில் ஈடுபட்ட ஐந்து பயங்கரவாதிகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் கண்டறியும் பணியில் தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக இறங்கியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நெட்வொர்க்கை முற்றிலுமாக அழிக்கும் நடவடிக்கைகளில்  தேசிய புலனாய்வு முகமை தீவிரமாக இறங்கியுள்ளது. பயங்கரவாதிகள் பூமியில் எங்கு ஒளிந்து கொண்டாலும்,தேடிப் பிடித்து, தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் மோடியின் சபதம்  விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: பகல்காமில் தாக்குதல்Army encircling Kashmir: NIA steps in to root out terrorists
ShareTweetSendShare
Previous Post

நெல் கொள்முதல் செய்ய 65 ரூபாய் கேட்கும் ஊழியர்கள் : விவசாயிகள் குற்றச்சாட்டு!

Next Post

ஐபிஎல் போட்டியில் கலக்கும் இளம் புயல் : ஒரே நாளில் உச்சம் தொட்ட வைபவ் சூர்யவன்சி!

Related News

100 நாள் வேலை திட்டம் – தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 19,000 போலி கணக்குகள் நீக்கம்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பாகிஸ்தான் அதிபராகும் அசிம் முனீர் ? : முஷாரப் பாணியில் ஆட்சி – இந்தியாவிற்கான சவால் என்ன?

அடுத்த குடியரசுத் துணைத்தலைவர் யார்? : தேர்தல் நடைமுறைகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்ப்பு!

வங்கதேச விபத்தால் அச்சம் : கேள்விக்குறியான சீனாவின் F-7 போர் விமான பாதுகாப்பு!

முடிவுக்கு வருகிறது 60 ஆண்டு சகாப்தம் : விடைபெறுகிறது இந்தியாவின் போர்க்குதிரை!

Load More

அண்மைச் செய்திகள்

இடமாற்றத்தில் மகிழ்ச்சி இல்லை, நல்ல நினைவுகளுடன் செல்கிறேன் – நீதிபதி விவேக் குமார் சிங்

சிறுவன் கடத்தல் வழக்கு – விசாரணை முறையாக நடைபெறவில்லை என்றால் சிபிஐக்கு மாற்ற நேரிடும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – அப்ரூவராக மாறுவதாக முன்னாள் காவல் ஆய்வாளர் மனுத்தாக்கல்!

மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிப்பு – விலை உயர்வு!

ஆய்வுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்காத பட்டாசு ஆலைகளை தற்காலிகமாக மூடலாம் – தென்மண்டல பசுமை தீர்ப்பாயம்

விரிவாக்கம் செய்யப்பட்ட பிரதமர் பங்கேற்கும் தூத்துக்குடி விமான நிலைய திறப்பு விழா – பணிகள் தீவிரம்

அஜித்குமார் கொலை வழக்கு – தனியார் மருத்துவமனையில் சிபிஐ விசாரணை!

பாகிஸ்தானின் அணுஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதா? – அம்பலப்படுத்திய கூகிள் எர்த் படங்கள்!

அதே குறைந்த விலை – மீண்டும் வருகிறது TATA NANO – வேற லெவல் டிசைன்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies