கேரள மாநிலம் கண்ணூரில் இருந்து திருவனந்தபுரத்திற்கு சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திருவனந்தபுரம் நோக்கி சென்றுகொண்டிருந்த கேரளா அரசு பேருந்து 30 பயணிகளுடன் ஆற்றிங்கல் பகுதிக்கு வந்துக்கொண்டிருந்தது.
அப்போது பேருந்தின் பின் பக்க சக்கரத்தின் அருகே கரும்புகையுடன் தீ எரிவதைக் கவனித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகளை உடனடியாக வெளியேற்றினார்.
பின்னர் பேருந்து முழுவதும் தீ பரவ தொடங்கிய நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.