கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி என்று திமுக அரசு குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையிலிருந்த அரிவாள்களே சாட்சி என்றும், பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி எனக்கூறியுள்ள அவர், போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி என விமர்சித்துள்ளார். ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழகத்தை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து முதலமைச்சர் தலைகுனிய வைத்துள்ளார் எனக்கூறியுள்ள அவர், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை மக்கள் வழியனுப்பி வைப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.