நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் கால்நடையை வேட்டையாட வந்த சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
நீலகிரி வனப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியிலிருந்து வெளியேறி, ஊருக்குள் புகுந்து, கால்நடைகளை வேட்டையாடுவது வாடிக்கையாக உள்ளது.
மஞ்சூரில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் புகுந்த சிறுத்தை ஒன்று, அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை வேட்டையாட முயன்றது.
அப்போது அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதால் ஆட்டை விட்டுவிட்டு வனப் பகுதிக்குள் சிறுத்தை சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.