மதுரை வாடிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு 35 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை ஊழியர்கள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு அரசு நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பெரிய அளவில் முறைகேடு நடப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்மணிகளைக் கொள்முதல் செய்வதில்லை என்றும், ஒரு மூட்டைக்கு 60 ரூபாய் வரை அதிகாரிகள் பணம் கேட்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.
கேட்கும் பணத்தைக் கொடுத்தாலும், சரியான நேரத்திற்குக் கொள்முதல் செய்யாததால், காலநிலை மாறுபாடு காரணமாக நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
கொள்முதல் நிலையத்தில் ஊழலுக்கு வழி வகுப்பதே அரசுதான் எனக் குறை திமுக நிர்வாகி குற்றம் சாட்டியுள்ளார். கொள்முதல் செய்யப்படும் கோணிக்கு ஒப்பந்தம் விடுவதுபோல கூலி ஆட்களுக்கும் ஒப்பந்தம் விட்டால்தான் ஊழல் நடக்காது எனத் தெரிவித்தார்.