2026-ல் திராவிட மாடலின் 2.O வெர்சன் வரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தலைமை செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர்கள் இருவர் சட்டப் பேரவை நடந்து கொண்டிருக்கும் போதே வீட்டுக்கு சென்றதாக தெரிவித்தார்.
அமைச்சர்கள் வழக்குகளை சந்திப்பது தான் திராவிட மாடல் என்றும், திமுகவின் பார்ட் 1இல் ஓட்டை; இதில் பார்ட் 2 எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
அடுத்த கூட்டத் தொடர் நடக்கும் போது எத்தனை அமைச்சர்கள் இருப்பார்கள் என தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்தியா வல்லரசாக வேண்டும் என்று அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மேற்கொண்டு வருவதாகவும்,.மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றினால் தமிழகம் அதிக வளர்ச்சி அடையும் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.