பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நாட்டுக்கே சென்றுவிட வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் நடைபெற்ற பஹெல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பவன் கல்யாண் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 1986-89 ஆண்டுகளில் காஷ்மீரில் இருந்ததாகவும், அந்த நேரத்தில், பண்டிதர்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காஷ்மீர் பண்டிதர்கள் தங்கள் வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். தற்போதைய பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை அதன் தொடர்ச்சியாகவே தான் கருதுவதாக பவன் கல்யாண் கூறினார்.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசி வரும் காங்கிரஸ் கட்சியினர் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும் என அப்போது தெரிவித்தார்.