திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, ராயம்பாளையம் ஊர் பொதுமக்கள் சார்பில் பெரிய மண் குதிரைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
நாளை கொடியேற்றம் நடைபெறவுள்ள நிலையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 3 பெரிய மண் குதிரைகளை, ராயம்பாளையம் ஊர் மக்கள் தோளில் சுமந்தபடி ஆகாச ராயர் கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று வழிபட்டனர்.
தொடர்ந்து ஆகாச ராயர் மற்றும் காத்தவராயருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.