கன்னியாகுமரியில் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததைத் தட்டிக்கேட்டதால் கணவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், வேங்கோடு பகுதியைச் சேர்ந்த லாரன்ஸுக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.
லாரன்ஸ் வெளிநாட்டில் கொத்தனார் வேலை பார்த்து வந்த நிலையில், மனைவி சோபிதா குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இவர்களின் எதிர் வீட்டில் வசித்து வந்த முன்னாள் ராணுவ வீரரான ராபர்ட், சோபிதாவிடம் தொடர்ந்து ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை அளித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுபற்றி சோபிதா தனது கணவர் லாரன்ஸிடம் கூற, கடந்த 3 வாரங்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய அவர் ராபர்ட்டைத் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் இருவருக்குமிடையே முன் விரோதம் ஏற்பட்ட நிலையில், வீட்டிலிருந்து வெளியே வந்த லாரன்ஸை ராபர்ட் இரும்பு ராடால் தாக்கி, அவரது உதட்டைக் கடித்துப் பிய்த்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.