அமெரிக்காவில் பள்ளி வளாகத்தில் அதிவேகமாகச் சென்ற கார் மோதியதில், மாணவர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் சாத்தமில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வீடு திரும்பி கொண்டிருந்த போது, பள்ளி வளாகத்தில் அதிவேகமாக கார் ஒன்று புகுந்தது.
கார் மோதியதில் குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.