ஈரான் நாட்டின் தென்பகுதியில் உள்ள துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 65-ஐ தாண்டியுள்ளது.
மேற்காசிய நாடான ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள பந்தர் அப்பாஸ் நகருக்கு அருகே ராஜேய் துறைமுகம் உள்ளது.
இந்த துறைமுகத்திலிருந்த கன்டெய்னரில் மர்ம பொருள் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 65-ஐ தாண்டியுள்ளது.
மேலும் ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்து மற்றும் அதைத் தொடர்ந்த வெடி விபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.