சிந்துநதி கால்வாய் திட்டத்திற்கு எதிராக போராட்டம் : பாகிஸ்தான் அரசு கவிழுமா?
Sep 21, 2026, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிந்துநதி கால்வாய் திட்டத்திற்கு எதிராக போராட்டம் : பாகிஸ்தான் அரசு கவிழுமா?

Murugesan M by Murugesan M
Apr 30, 2025, 02:02 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சிந்து மாகாணத்தில் ஆறு புதிய கால்வாய்களைக் கட்டும் அரசுக்கு எதிராக போராட்டங்களால் பாகிஸ்தான் முடங்கி உள்ளது. ஆயிரக்கணக்கான லாரிகள் சிக்கித் தவிக்கின்றன. ரயில் போக்குவரத்து போராட்டக்காரர்களால் நிறுத்தப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது பாகிஸ்தானில் என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஒருபக்கம் ஆப்கானிஸ்தானின் தெஹ்ரீக் இ தாலிபான்கள் தாக்குதல்,மறுபக்கம் பலூச் விடுதலை ராணுவத்தினரால் தாக்குதல், எனச் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இது போதாத காலம்.

பகல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்தியாவின் கோபத்துக்கும் ஆளாகியுள்ளது.முக்கியமாகப்  பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா உடனடியாக நிறுத்தியுள்ளது. இந்தச் சுழலில்,சிந்து நதி நீரை நம்பியுள்ள பஞ்சாப் மாகாண மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி அசிம் முனீர் மற்றும் பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் செரீப் ஆகியோர்,கடந்த பிப்ரவரியில் சோலிஸ்தான் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர். அப்போதிருந்தே ,அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்து வருகிறது.  பசுமை பாகிஸ்தானுக்கான முன்முயற்சியாக தெற்கு பஞ்சாபில் குறைந்தது 1.2 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய ஆறு கால்வாய்களை உருவாக்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சர்ச்சைக்குரிய திட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றன.

சோலிஸ்தான் திட்டத்தை ஒத்திவைப்பதாக,அரசு உறுதியளித்தாலும் அதை ஏற்க போராட்டக்காரர்கள் தயாராக இல்லை. சிந்துவின் பல பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் தடைப்பட்டுள்ளன. காந்த்கோட், காஷ்மோர், கோட்கி, சுக்கூர் மற்றும் கைர்பூர் மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான லாரிகள் நீண்ட வரிசையில் சிக்கித் தவிக்கின்றன.

சுமார் 30,000 லாரிகள் மற்றும் எண்ணெய் டேங்கர்கள் சாலைகளில் அப்படியே நிற்கின்றன என்றும்,10 நாட்களுக்கும் மேலாக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் ஒரு லட்சம் ஓட்டுநர்கள் நடுரோட்டில் தவிக்கின்றனர் என்றும், அனைத்து பாகிஸ்தான் சரக்கு போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுவாக ஒரு லாரியில் 10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதி அல்லது உள்நாட்டு விநியோகத்துக்காகக் கொண்டு செல்லப்படும் நிலையில், இந்த போராட்டத்தால் நாட்டின் விநியோகச் சங்கிலிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன.

எண்ணெய் நிறுவன ஆலோசனைக் குழு (OCAC) மற்றும் பாகிஸ்தான் உர உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் குழு எனப் பாகிஸ்தானின் அனைத்து வர்த்தகம்  வணிகம்  மற்றும் தொழில்துறை அமைப்பினரும், இந்த போராட்டத்தால்,நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக 1000க்கும் மேற்பட்ட எண்ணெய் டேங்கர்கள் நடுவழியில் சிக்கியிருப்பதால் உடனடியாக எரிபொருள் பற்றாக்குறையும் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  PTI ,PPP உள்ளிட்ட கட்சிகள், வழக்கறிஞர்கள்,வணிகர்கள், விவசாயிகள், சமூக ஆர்வலர்கள்,மட்டுமில்லாமல் ஏராளமான பொதுமக்கள், சோலிஸ்தான் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யும் வரை உள்ளிருப்புப் போராட்டங்களைத் தொடரப் போவதாக  அறிவித்துள்ளனர்.

இந்தத் திட்டத்துக்குக் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சி, ஒருபடி மேலே சென்று,சோலிஸ்தான் திட்டம் ரத்து செய்யப்படவேண்டும். இல்லையென்றால், செபாஸ் செரீப் ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம் என்று எச்சரித்துள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஆதரவுடன் தான் பாகிஸ்தான் அரசை  செபாஸ் செரீப் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: சிந்துநதிIndiapakistanProtest against the Indus Canal project: Will the Pakistani government fall?பாகிஸ்தான் அரசு
Share
Tweet
SendShare
Previous Post

அரசியலில் சுய கட்டுப்பாடு முக்கியம் : தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!

Next Post

ஈரான் : துறைமுகத்தில் வெடி விபத்து – உயரும் பலி எண்ணிக்கை!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies