மதுரை சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன.
சித்திரன்னா இது எந்த ஒரு நல்ல காரியமும் செய்ய கூடாதுன்னு சொல்லிவிட்டு இருந்தா ஒட்டுமொத்தமா எல்லாரையும் திரும்பி பாக்க வைக்கிறது தான் மதுரை மதுர சித்திரைத் திருவிழா. அந்த 15 நாள் எந்த ஊர் காரங்களாக இருந்தாலும் மதுரைக்காரர்களாக ஆகிருவாங்க.
கிட்டத்தட்ட 400 வருஷங்களுக்கு மேலா இந்த சித்திரை திருவிழா விமரிசையா கொண்டாடிட்டு இருக்காங்க மதுரைல. பெரும் கொண்டாட்டத்துடன் பேரரசி மீனாட்சிக்கு சொக்கரோட திருமணம் நடக்குது அதே வேளையில நம்ம அழகர் மலைய ஆளுர அழகர் கிளம்புறாரு தங்கச்சியைப் பாக்க. இது தான் வரலாறு சொல்லுது.
ஆனா இந்த திருவிழாக்களின் திருவிழாவான சித்திரைத்திருவிழாவுக்கு இன்னொரு கதையும் இருக்கு மாசில நடந்துட்டு இருந்த மீனாட்சி கல்யாணத்தையும், சித்திரைல தேவருக்கு வந்த அழகரோட வருகையும் சேத்து வைணவத்தையும் சைவத்தையும் ஒன்று சேப்பதுக்காக இந்த சித்திரைத் திருவிழா கொண்டாடுறாங்கன்னு ஒரு வரலாறும் இருக்கும்.
மீனாட்சி பட்டாபிசேகத்துல இருந்து வைகை ஆத்துல அழகர் இறங்குறது வரைக்கும் மதுரை முழுக்க விருந்து தான். ஊரெங்கும் வித விதமான சாப்பாடு சாபிட்டுகிட்டு ஏரியா குள்ள சாமி உலா வர மாறி மதுரைக்காரைங்க உலா வருவாங்க.
கொடியேற்றம் தொடங்கி 15 நாளுக்கு காலையும் மாலையும் 4 மாசி வீதியும் கோலாகலம் தான். 9ம் தேதி திருக்கல்யாணம் முடிஞ்ச பின்ன அழகர் மலையிலிருந்து அழகர் புறப்படுகிறது கருப்பசாமிகிட்ட உத்தரவு வாங்கிட்டு அழகர் கிளம்புறது இருக்கே அத காண கோடி கண்கள் வேணும்.
வைகை ஆத்துல அழகர் இறங்குற வைபவத்த பாக்க ஒட்டுமொத்த மதுரையும் வைகை ஆத்துல வெயிலோட சேர்ந்து மக்களும் ஜெக ஜோதியா கொண்டாடிட்டு இருப்பாங்க.
வெயில் அடிக்கிது சித்திரைல வெளியவே வரக்கூடாதுன்னு இருக்குற மத்த ஊருக்காரங்க மத்தியில 11 மாசத்தையும் விட்டுட்டு மதுரைக்காரங்க மட்டும் சித்திரை மாசத்துக்காக காத்திருப்பாங்க.