திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற போது விபத்தில் சிக்கிய காரில் இருந்தவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
உடுமலை பகுதியைச் சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது பேரன் மற்றும் மகளுடன் கோவை சென்றுவிட்டு, மீண்டும் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பல்லடம் அருகே செமிபாளையம் என்ற இடத்தில் லாரியை முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக நாச்சிமுத்து பயணித்த கார் விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தின் காரணமாகத் திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்த நாச்சிமுத்து உள்ளிட்ட 3 பேரையும் அங்கிருந்த மக்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.