பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
லதா ரஜினிகாந்த்தின் ஃபீஸ் ஃபார் சில்ட்ரன் (peace for children) அமைப்பு சார்பில் ‘பாரத சேவா’ என்ற புதிய அமைப்பின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்த திட்டத்தை ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய ரஜினிகாந்த்,
செல்போன் யுகத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் என சிலர் நம் பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமலேயே மேற்கத்திய கலாச்சாரம்நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மக்கள் அதில் நிம்மதி இல்லை என்று சொல்லி பாரதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.