திருச்செந்தூர் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து புகுந்த கொள்ளையர்கள் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி தாக்கி தங்க நகையை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராணிமகாராஜபுரம் பகுதியில் மூதாட்டி ஜெயராணி தனியே வசித்துவருகிறார்.
இவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய கொள்ளையர்கள் காதில் அணிந்திருந்த சுமார் 1 சவரன் தங்க கம்மலை வாங்கியதோடு வீட்டில் வேறு தங்கப்பொருட்கள் இருக்கிறதா எனக்கேட்டு தாக்கியுள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.