மகாராஷ்டிரா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் இந்தியாவின் வளர்ச்சியில் எப்போதும் முக்கிய பங்கு வகித்து வரும் மகாராஷ்டிரா மக்களுக்கு, மகாராஷ்டிரா தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவைப் பற்றி நினைக்கும் போது, அதன் புகழ்பெற்ற வரலாறும் மக்களின் துணிச்சலும் நினைவுக்கு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மாநிலம் முன்னேற்றத்தின் வலுவான தூணாகவும், அதே நேரத்தில் அதன் வேர்களுடன் இணைந்ததாகவும் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.