நடிகர் அஜித் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தன் கடும் உழைப்பாலும், தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும், நாட்டின் முக்கியமான திரைக்கலைஞர்களில் ஒருவராக உயர்ந்து, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதையும் வென்றிருக்கும் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.