சாதி வாரி கணக்கெடுப்பு - பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!
Sep 10, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

Ramamoorthy S by Ramamoorthy S
May 1, 2025, 10:37 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.

அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது பெரும் வரவேற்புக்குரியது. இதன் மூலம் ஒடுக்கப்பட்ட, பிற்பட்ட, விளிம்பு நிலை மக்களின் சமூக, பொருளாதார சூழல் அறிந்து அதற்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க முடியும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை சமூக மாற்றத்திற்கு உதவிகரமாக இருக்கும். இதற்காக பிரதமர் மோடிக்கு  மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறியுள்ளார்.

அதேசமயம் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அரசியல் நாடகம் தற்போது முடிவுக்கு வந்து விட்டது. சொந்த நலன், குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாக கொண்டு குடும்ப ஆட்சி நடத்தி வரும் இண்டி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மக்களை பற்றி ஒருபோதும் கவலை இல்லை என்றும் அவர் தெரிவத்துள்ளார்.

பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியுள்ள போதிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார். மத்திய அரசு தான் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியும் என்று போலி நாடகம் நடத்தி வந்தார். அதுபோலவே சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்து வந்த காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை,மாறாக அதை எதிர்த்தே வந்துள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற போலி நாடகத்தை நடத்தியது. ஆனால் அந்த கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் இது நடத்தப்படவில்லை. தற்போது மத்திய அரசே சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதன் மூலம் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் முகத்திரை கிழிந்துள்ளது என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Tags: Congressminister l murugansocial justicecaste censusPM ModiModibjprahul gandhicentral government
Share
Tweet
SendShare
Previous Post

அஜித் பிறந்த நாள் – அண்ணாமலை வாழ்த்து!

Next Post

ஜம்மு-காஷ்மீர் எல்லைக்கோட்டு பகுதியில் 7-வது முறையாக பாக் ராணுவம் தாக்குதல் – இந்தியா பதிலடி!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies