அமெரிக்காவில் மனைவி மற்றும் மகனைக் கொலை செய்து விட்டு இந்தியத் தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நியூகாஸ்டில் பகுதியில் வசித்து வந்த கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த தொழிலதிபர் ஹர்ஷவர்தனா கிக்கேரி. இவர் தனது மனைவி சுவேதா மற்றும் 14 வயது மகனைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அவரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார். சம்பவத்தின் போது இளைய மகன் வீட்டில் இல்லாததால், அவர் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.