2025-ம் ஆண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஒரே கட்டமாக நடைபெறும் இத்தேர்வை சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். முன்னதாக தேர்வு மையத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்விற்கான நுழைவுச் சீட்டு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் நுழைவு சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.