அடுத்த 36 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவம் எங்களின் மீது போர் தொடுக்க வாய்ப்புள்ளது எனப் பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் அட்டாவுல்லா தரார் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாகப் பாகிஸ்தான் – இந்தியா இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் தொடர் அத்துமீறல் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த 24 முதல் 36 மணி நேரத்திற்குள் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன எனத் தெரிவித்துள்ளார்.