நீலகிரி மாவட்ட கோத்தகிரி அருகே தடுப்பு வேலி அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர்களை திமுக பிரமுகரின் மகன் அடியாட்களுடன் தாக்கிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரி அருகே கடக்கோடு பகுதி சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனக்குச் சொந்தமான நிலத்தைக் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்றுள்ளார். இந்த சூழலில் தனது நிலத்தில் தடுப்பு வேலி அமைக்க வந்த நிலத்தின் உரிமையாளரை, நடுஹட்டி பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகியின் மகன் அருண் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த நிலத்தின் உரிமையாளர் உள்ளிட்ட இருவர் மருத்துவமனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.