திண்டுக்கல் அடுத்த சித்திரேவு பகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர் ஒருவர் கொடுத்த அன்பளிப்பை அவர் சாலையில் வீசிச் சென்றது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் சென்றுகொண்டிருந்த அவரை ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் பின் தொடர்ந்து சென்றனர். அப்போது தொண்டர் ஒருவர், பை ஒன்றை எடுத்துக் கொண்டு விஜயின் காரை நோக்கி ஓடினார்.
பின்னர் பையை விஜயிடம் கொடுக்க முயன்றார். அப்போது கார் கண்ணாடியில் சிக்கிக் கொண்ட பையை விஜய் கையால் வெளியே தட்டிவிட்டார். விஜயின் இந்த செயல் தொண்டர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.