எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் அதைப் பயன்படுத்தி மொழி செழுமை பெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மறைந்த காமெடி நடிகர் கிரேஸி மோகன் எழுதிய 25 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது உரையாற்றிய கமல்ஹாசன், புத்தகம் படிக்கும் பழக்கம் குறைந்து கொண்டே வருவதாக கூறினார். மொழிக்கான மரியாதை எப்போதும் உண்டு எனவும் எத்தனை தொழில்நுட்பம் வந்தாலும் அதைப் பயன்படுத்தி மொழி செழுமை பெறும் எனவும் தெரிவித்தார்.