டெல்லியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
டெல்லியில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், அதிகாலை சூறைகாற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. டெல்லி, நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், துவாரகா சுரங்கப்பாதை, கீதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
இதனிடையே, டெல்லியில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. டெல்லிக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், அட்டவணைப்படி விமானங்கள் இயக்கப்படவில்லை என்றும், இடையூறுகளை தவிர்க்க முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.