ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ஊராட்சி பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் டேபிள், சேர் உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக வழங்கினர்.
பெருமாள் குடும்பன்பட்டி பகுதியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தற்போது 64 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளிக்கு தேவையான டேபிள், சேர், மின்விசிறி, கணினி உள்ளிட்ட பொருட்களை தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
முன்னாள் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், கிராம மக்களும், பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.