ஏழை, பணக்காரர், கற்றவர், கல்லாதவர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக அரவணைத்துக் கொண்டவர் ஸ்ரீ ராமானுஜர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், புகழ் பெற்ற வைணவ ஆச்சார்யர்களில் முதன்மையானவரும், தலைசிறந்த சமூகச் சீர்திருத்தவாதியுமான, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி இன்று என தெரிவித்துள்ளார்.
அவர் பாகுபாடற்ற சமுதாயம் மலர வேண்டும் எனப் பாடுபட்டவர் என்றும், சமூகத்தில் சமத்துவத்தை மலரச் செய்த சமதர்ம ஞானி, ஶ்ரீ ராமானுஜாச்சாரியார் அவர்களைப் போற்றி வணங்குவோம் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.