ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் பாதாளச் சாக்கடை கழிவுகள் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறையை ஒட்டி நாள்தோறும் ராமேஸ்வரம் கோயிலுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராட முடியாத அளவிற்குப் பாதாளச் சாக்கடை கழிவுகள் கலந்து வருவதாகவும், இதனால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், அக்னி தீர்த்த கடலின் புனிதத்தைக் காக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.