ஸ்ரீலீலா நடித்து கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கிஸ் படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
நாகன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். ரோபோ சங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி உள்படப் பலர் நடிக்கின்றனர்.
ஜெய்சங்கர் ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்கிறார். பிரகாஷ் நிக்கி இசை அமைக்கிறார். கன்னடத்தில் இயக்கிய ஏ.பி.அர்ஜுன் தமிழிலும் இயக்குகிறார்.
படத்துக்கு ‘கிஸ் மீ இடியட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சென்டிமென்ட் கலந்த காதல் கதையுடன் இந்தப் படம் உருவாகி வருவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.