புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் மற்றும் முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
புதுச்சேரி மறைத்தலை அடிகள் சாலையில் ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையம் இயங்கி வந்தது. பழமையான இந்த பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 29 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.
கட்டுமானப் பணிகள் மூன்று மாதத்திற்கு முன்பு நிறைவடைந்த நிலையில், கடைகள் ஒதுக்கீடு தொடர்பாகப் பேருந்து நிலையத்தைத் திறப்பதில் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தைத் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.