கர்நாடகாவில் அரசுப் பேருந்தை நிறுத்தி நமாஸ் செய்த ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து அமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஹாவேரி மாவட்டம் ஹனகல்லில் இருந்து விஷால்கார்க் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உப்பள்ளி அருகே சென்றபோது பேருந்தைச் சாலையோரம் நிறுத்திய ஓட்டுநர் ஏஆர் முல்லா, ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் வந்து அமர்ந்து நமாஸ் செய்தார்.
இதனைப் பேருந்திலிருந்த பயணிகள் காணொளியாகப் பதிவுசெய்த நிலையில், இணையத்தில் வைரலானது. இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.