அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்தவும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அரிசி வகைகளுக்கான வரியை விதித்துள்ளது.
இதில் புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில வகையான அரிசி வகைகளுக்கு 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு விதித்துள்ளது.
இன்று முதல் அமலுக்கு வந்துள்ள வரிவிதிப்பு மக்களுக்குத் தேவையான அளவு அரிசி கிடைப்பதையும், விநியோகம் தொடர்ச்சியாக இருப்பதையும் உறுதி செய்யும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை ஏற்றத்தைத் தடுக்கும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.