பஹெல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானின் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ-க்கும் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
26 சுற்றுலாப் பயணிகளைச் சுட்டுக்கொன்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு மூலம் இந்த சதித்திட்டத்தை ஐ.எஸ்.ஐ நடத்தியிருப்பதாக என்.ஐ.ஏ தனது முதற்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதலில் ஈடுபட்ட 2 தீவிரவாதிகளான ஹாஷ்மி மூசா என்கிற சுலைமான், அலி பாய் என்கிற தல்ஹா பாய் ஆகியோர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.