பஹெல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 பேரும் பைசரன் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்த நிலையில், அவர்களைத் தேடும் பணியில் என்.ஐ.ஏ மற்றும் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹெல்காமில் கடந்த 22-ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
தாக்குதல் சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், தாக்குதலில் தொடர்புடைய 4 தீவிரவாதிகளின் புகைப்படங்களும் அண்மையில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், அவர்கள் நால்வரும் பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் பதுங்கியிருப்பதை என்.ஐ.ஏ உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.