காஷ்மீர் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், உத்தரப் பிரதேசத்தின் கங்கா விரைவு சாலையில் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்திய விமானப்படை பயிற்சி மேற்கொண்டது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை நடைபெற்றதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராகப் பல அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் உள்ள கங்கா அதிவிரைவு சாலையில் ரபேல், மிராஜ், ஜாகுவார் போர் விமானங்களைத் தரையிறக்கி இந்திய விமானப்படை பயிற்சி மேற்கொண்டது. விரைவு சாலையின் திறனை மதிப்பிடுவதற்காக இந்த பயிற்சி நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.