அசாம் பஞ்சாயத்துத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
சோனித்பூர், லக்கிம்பூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களுக்கு முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
இதேபோல் மீதமுள்ள 13 மாவட்டங்களுக்கு மே.7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், ஒரு கோடியே 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.